Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் : இந்திய அணி வீரர்கள் 3 நாட்கள் தனிமை ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் .

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வருகின்ற  26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து  2-வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 3- 7)ஜோகன்ஸ் பர்க்கிலும், கடைசி டெஸ்ட் போட்டி (ஜனவரி 11- 15) கேப் டவுனிலும் நடைபெற உள்ளது .இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டி ஜனவரி 19, 21 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறுகிறது .இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர் .

மும்பை வந்த இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்துக்கு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் தனிமைப்படுத்தப் பட்டனர் அதோடு நாளை வரை வீரர்கள் தனிமையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன்பிறகு வருகின்ற 16-ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட உள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் ஸ்ரேயாஸ் அய்யர் ,ரி‌ஷப் பண்ட், ஜெயந்த் யாதவ் உட்பட வீரர்கள் ஹோட்டலில் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் .ஆனால் விராட் கோலி ஹோட்டலுக்கு இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது .அதே சமயம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட்கோலி விலக இருப்பதாக தகவலும்  வெளியாகியுள்ளது.

Categories

Tech |