Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்….!!!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்கா – இந்தியா தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின்  மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இரு அணியில் உள்ளவர்களுக்கு தினமும் பரிசோதனை நடத்தப்படும் என்றும் , தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவாரே தவிர தொடரை நிறுத்தி  வைக்கப்படாது என மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |