இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது .
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது .
📍Touchdown South Africa 🇿🇦#TeamIndia #SAvIND pic.twitter.com/i8Xu6frp9C
— BCCI (@BCCI) December 16, 2021
இந்நிலையில் மாலையில் இந்திய வீரர்கள் ஜோகன்ஸ்பர்க் சென்றடைந்தனர். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது .அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் தற்போது ‘ஓமைக்ரான்’ கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு சென்றவுடன் இந்திய வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் பையோ-பபுள் வளையத்திற்குள் இணைவார்கள்.