Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி …. ! கொல்கத்தாவில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது .இதில்  இந்திய அணி 3- 0 என்ற கணக்கில்  வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20  போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது.இதில் காயம் காரணமாக கே.ல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தசைப்பிடிப்பு காரணமாக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் நடந்த  இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இன்றைய போட்டியில்  இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Categories

Tech |