இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் 6 மைதானங்களில் நடந்த திட்டமிட்ட நிலையில் தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அகமதாபாத்திலும், 2-வது போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெய்ப்பூரில், 3-வது போட்டி 12-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதியும், 2-வது போட்டி 18-ஆம் தேதியும், 3-வது போட்டி 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் இப்போட்டிகள் 6 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டது.ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.அதேசமயம் அடுத்த மாதம் தொற்று பரவல் உச்சத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்ய பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 6 மைதானங்களில் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை 3 மைதானங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே சமயம் அணி வீரர்களின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,” வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இது ஒரு கடினமான சூழ்நிலை. மேலும் நிலைமையை கவனித்து சரியான நேரத்தில் நாங்கள் முடிவு எடுப்போம் ” இவ்வாறு அவர் கூறினார்.