Categories
கிரிக்கெட் விளையாட்டு

4-ஆவது டி20 போட்டி: ஹிட்மேன் கிடையாது… வெல்லுமா நியூசி… இந்திய அணி பேட்டிங்..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி 20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆக்லாந்தில் நடந்து முடிந்த இரண்டு டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடந்த 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாறு படைத்தது.

இந்த நிலையில் இன்று நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் 12 :30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகியதால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவூதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுகிறார். அதேபோல இந்திய அணியில் ரோஹித் சர்மா, முகமது சமி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சவூதி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. நியூசிலாந்து அணி தொடரை இழந்தநிலையில் இன்றைய போட்டியில் எப்படியாவது சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று போராடும் என்பதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Categories

Tech |