Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை இந்தியா தான் வெல்லும்” முழு ஆதரவு அவர்களுக்கே – சோயிப் அக்தர்…!!

உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் சுற்றுகள் முடிவடைந்து, அரையிறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை (09-ம் தேதி)  நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு 11-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், அரை இறுதியில் நியூசிலாந்து அணியால் நெருக்கடியை தாங்கி கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் வர மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால் எனது ஆசை உலக கோப்பை துணை கண்டத்திடம் இருக்க வேண்டும் என்பதுதான். ஆகையால் இந்தியாவுக்கு எனது முழு ஆதரவு. உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் கோப்பையுடன் வருவார்கள் என நம்புகிறேன்.

Image result for shoaib akhtar

மேலும் அவர் கூறும் போது,  ரோகித் சர்மா சிறப்பாக ஆடி வருகிறார். அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடக்கூடியவர்.  அவர் ஷாட்களை தேர்வு செய்வது சிறப்பான ஓன்று. அவருடன் தொடக்க வீரர் கேஎல் ராகுலும் நன்றாக ஆடுகிறார். இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரே மாதிரி சமமான வெற்றிகளை பெற்றிருந்தன. நியூசிலாந்தை விடவும் பாக். சிறப்பாக ஆடியது. ஆனால் நிகர  ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. நிகர ரன்ரேட் என்பது மோசமான விஷயம்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |