இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 2 : 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .இதனையடுத்து 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று 1:30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் இப்போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.