இந்தியன்-2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன்-2 படம் இந்த வருடம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு இருக்கையில் இந்தியன்-2 திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் குறித்து அவ்வப்போது ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாகவும், கமல்ஹாசனின் மனைவியாகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக கசிந்து வருகின்றன.