Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 இந்தி இல்லை தமிழனே … யார் என தெரியுமா ?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் .

Image result for indian 2 movie

மேலும்,  அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் , `இந்தியன்’ முதல் பாகத்தில் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ஊழல் பிரச்னையைப் பற்றி படமாக்கிய ஷங்கர் , இந்தியன் 2-ஆம் பாகத்தில்,

Image result for bobby simha

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அவலங்களை படமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் , இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க இந்தி முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேசி வந்தனர். இந்நிலையில் , இந்த படத்திற்கு வில்லனாக தமிழ்  நடிகர் பாபி சிம்ஹா நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |