“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள்.
இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது.
இதனை தொடர்ந்து கொரோனா நோய் தொற்றினால் மீண்டும் ஆரம்பமாகவில்லை. பின்னர் லைக்கா நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் படப்பிடிப்பு நின்று விட்டது. விக்ரம் திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றிக்குப் பிறகு “இந்தியன் 2” பிரச்சனைகளை பேசி தீர்த்தது. மேலும் படபிடிப்பை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். “இந்தியன் 2” திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.