Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க செல்கிறது இந்திய விமானம்!

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது.

Image result for Indian Air Force is planning to bring in Indians stranded in Iran

அதேபோல ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக 237 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 7,161 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.  ஈரானில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகின்றது. ஈரானில் பல இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய விமான படை விமானம் இன்று இரவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் இந்தியர்கள் சிக்கித்தவிக்கும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Categories

Tech |