Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த ஸ்பெல் பீ போட்டி…. முதலிடம் பிடித்து…. 38 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி….!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆங்கில உச்சரிப்பு போட்டியில் பங்கேற்று 38 லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஸ்பெல் பீ எனப்படும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட மாணவர்களுக்கான இப்போட்டியில் நடுவர்கள் ஆங்கில வாக்கியங்களை கொடுப்பார்கள். அதனை மாணவர்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். தற்போது நடந்த இப்போட்டியில் அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று கடைசி சுற்றில் இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர்.

ஹரிணி லோகன் மற்றும் விக்ரம் ராஜு இருவரும் கடைசி போட்டியை எதிர்கொண்டனர். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். கடைசி சுற்றில் ஒரு நீளமான வாக்கியத்தை உச்சரிக்க வேண்டும்.

இதில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார். விக்ரம், 15 வார்த்தைகளை சரியாக உச்சரித்து இரண்டாம் இடம் பெற்றார். முதலிடம் பிடித்த ஹரிணி லோகனுக்கு பட்டமும், 38,80,000 ரூபாய் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |