Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ தளபதி… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்த இந்திய ராணுவ தளபதி இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்து ஆலோசித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு இரண்டு நாட்கள் பயணம் சென்றிருந்த இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனேக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை செலுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்த இந்திய ராணுவ தளபதி இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்து ஆலோசித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நரவனே இங்கிலாந்துக்கு செல்ல விருப்பதாகவும் அங்கு முப்படை தலைமை தளபதியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை காசினோ நகரில் திறந்து வைப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |