இந்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ்-400 வகை ஏவுகணையை அடுத்த வருட தொடக்கத்தில் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சமீப வருடங்களாக தொடர்ந்து எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியில் சீனா பல ஆயுதங்களை குவித்திருக்கிறது. சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்கிறது. எல்லையில் நடக்கும் மோதலை தடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசு, தனது இராணுவ படைகளுக்கு மேலும், வலிமையாக்க, ரஷ்ய நாட்டிலிருந்து, எஸ்-400 வகை ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இதில், முதலாவதாக இரண்டு ஏவுகணைகள் வந்திருக்கிறது. அவற்றை பயன்படுத்துவதற்குரிய சாதனங்கள், டிசம்பர் மாதத்தில் வந்தடையும் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அரசு, அந்த ஏவுகணைகளை இயக்க இந்திய ராணுவ குழுவிற்கு பயிற்சி அளித்திருக்கிறது. சீன அரசு, லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் இருக்கும், தங்கள் பகுதியில், எஸ்-400 வகை ஏவுகணைகளை நிறுவியிருக்கிறது. இதற்கு பதிலாக தான், இந்திய எல்லைப் பகுதியில், புதிதாக ரஷ்யாவிடமிருந்து வாங்கிய s-400 வகை ஏவுகணைகளை நிறுவ இந்திய ராணுவம் தீர்மானித்திருக்கிறது.