Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.-வாக பதவியேற்கும் இந்தியர்…. வெளியான முக்கிய தகவல்….!!

இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாக் டோர்ஸி தனது பதவியில் இருந்து விலகுவதற்கான உரிய நேரம் இதுதான் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜாக் டோர்ஸி மின்னஞ்சல் மூலம் “பதவியில் இருந்து விலகுவது ஒரு கடினமான முடிவுதான். டுவிட்டர் நிறுவனம், வேலை மற்றும் உங்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன்” என்ற உருக்கமான தகவலை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதாவது ஜாக் டோர்ஸி கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக டுவிட்டரில் சி.இ.ஓ. தலைவர் மற்றும் துணைத்தலைவராக பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் பதவி விலகுவதையடுத்து இந்தியரான பராக் அகர்வால் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ ) பணியாற்ற உள்ளார்.

Categories

Tech |