இலங்கை நாட்டின் விமான நிலையத்தில் இந்திய தொழில் அதிபர் ஒருவர் 4 கோடி வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளுடன் கைதாகியிருக்கிறார்.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களுடன் விமான நிலையத்தில் சிக்கினார். அவர் இலங்கையிலிருந்து சென்னை செல்ல பண்டாரநாயக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அவரின் பெட்டியில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கனட நாட்டு டாலர்களும், 19 ஆயிரம் யூரோ நோட்டுக்களும் இருந்திருக்கிறது.
இலங்கை மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய் வைத்திருந்துள்ளார். அவரிடம் அந்த நோட்டுகளை கைப்பற்றி, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், அவரை கைது செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.