Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு வீடியோ கால் தான்!”…. 900 பேரின் வேலையும் குளோஸ்… இந்திய தொழிலதிபரின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவில், இந்திய தொழிலதிபர், வீடியோ அழைப்பில் பேசி, தன் நிறுவனத்தை சேர்ந்த 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் விஷால் கர்க் என்ற தொழிலதிபர், “பெட்டர் டாட் காம்” என்னும் வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனம் நடத்துகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, இவரது நிறுவனத்தில், இடைத்தரகர் கட்டணமில்லாமல், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு கடன் பெற முடியும். எனவே, இந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்தது.

இந்நிலையில், விஷால் கர்க், வீடியோ அழைப்பில் தன் நிறுவனத்தின் பணியாளர்களுடன் பேசி சுமார் மூன்று நிமிடங்களில் 900 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறார். இதனால், மொத்த ஊழியர்களில் 15% பேர் பணியை இழந்துள்ளனர். விஷால் கர்க், பணியில் தாமதம், திறமையின்றி செயல்பட்டது, குறைவான உற்பத்தி திறன் போன்ற காரணங்களால் பணியாளர்களை நீக்கம் செய்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் சந்தையில் அதிக போட்டி நிலவுவதால், தீவிரமாக பணி மேற்கொண்டால் தான் நிறுவனத்தின் மதிப்பை தக்கவைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் பேசிய வீடியோ கான்பிரன்ஸ் காலில், “நீங்கள் இந்த தகவலை கேட்க விரும்பமாட்டீர்கள், ஆனால், இந்த தீர்வை எடுத்தாக வேண்டும். இவ்வாறான தீர்வை இரண்டாம் முறை நான் எடுக்கிறேன். முதல் தடவை நான் அழுதேன். ஆனால் இந்த முறை வலிமையுடன் உள்ளதாக  நினைக்கிறேன். இந்த தீர்வை மேற்கொள்வதில் எனக்கும் விருப்பம் இல்லை. எனினும் இது முக்கிய முடிவு.

இந்த காணொலி காட்சியில் நீங்கள் உள்ளீர்கள், எனில் நீங்கள் துரதிஸ்டமானவர்கள். இந்த வீடியோ அழைப்பில் இருக்கும் அனைவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். உங்களில், 250க்கும் மேற்பட்டோர் 8 மணி நேரத்திற்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டு 2 மணிநேரங்கள் தான் பணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். அப்படியெனில் நீங்கள் நிறுவனம்  மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து திருடுவதாக அர்த்தம். எனவே நிறுவனத்திலிருந்து 15% ஊழியர்களை நீக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த நிறுவனத்தை சேர்ந்த 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கு முன், ஒவ்வொரு ஊழியரும், எத்தனை தொலைபேசி அழைப்புகளை பேசியிருக்கிறார்கள்? வாடிக்கையார்களின் எத்தனை அழைப்புகளை ஏற்றுள்ளார்கள்? எத்தனை அழைப்புகளை ஏற்கவில்லை? என்று பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |