கனடாவில் பூர்வகுடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய குழந்தைகளும் இருப்பார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சமயத்தில் பூர்வகுடியின வழக்கறிஞர் Eleanore Sunchild இச்சம்பவம் குறித்து கூறுகையில், கனடா தற்போது தான் கொலை செய்யப்பட்டவர்கள் தவிர்த்து மீதம் இருக்கும் குழந்தைகள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.
அதாவது அந்தக் கொடுமைகளிலிருந்து, மீண்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான கொடுமைகள், போன்றவை இனிமேல் தான் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் Kamloopsஇல் நடந்த சம்பவம், கொடுமையின் உச்சம். ஆனால் அது போன்று மேலும் அதிகமாகவே இருக்கிறது என்று கூறுகிறார்.
மேலும் தன்னை பொருத்தமட்டில், இது ஒரு இனப்படுகொலை. இந்தியாவை சேர்ந்த குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், மாயமாகி இருக்கிறார்கள். இனிமேல் தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். இது போன்ற செய்திகள், கொடுமைகளிலிருந்து தப்பி, மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழும் பூர்வகுடியினரை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மக்கள், நாடு தங்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்பதை உணரக் கூடிய தருணம் இது என்று கூறியிருக்கிறார்.