உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமான கஞ்சன்ஜங்காவிற்கு சென்ற மலையேற்ற வீரர் தொடர்ந்து பயணிக்க முடியாமல் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலையில் இருக்கும் என்ற கஞ்சன்ஜங்கா சிகரம் தான் உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமாக இருக்கிறது. இச்சிகரம் சுமார் 8586 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்ற வீரர்கள் பலரும் இந்த சிகரத்தின் உச்சிக்கு சென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், நாராயண அய்யர் என்ற இந்தியர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சியை நோக்கி பயணித்திருக்கிறார். அப்போது, சுமார் 8200 மீட்டர் உயரத்தில் சென்றபோது அவர் சோர்வடைந்தார். இதனால், பயணத்தை தொடர்ந்து அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.