உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் காதல் குறித்த பார்வைகள் வேறுபடும். ஒரு சிலருக்கு தாங்கள் வளர்க்கும் நாய் மேல் காதல், ஒரு சிலருக்கு தங்களின் வேலையின் மேல் காதல், ஒரு சிலருக்கு இணை, ஒரு சிலருக்கு மட்டுமே கிரிக்கெட்.
இந்தியாவில் இளைஞர்களுக்கு முதல் காதல் என்பது கிரிக்கெட்தான். அந்தக் காதல் வெற்றியா, தோல்வியா என்பதைக் கடந்து தொடர்ந்து கிரிக்கெட்டுடன் பயணம் செய்து அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தனது 3 வயதிலேயே கிரிக்கெட் மீது காதல் கொண்ட சிறுவன் பின் நாள்களில் சர்வதேச கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்பட்டு வருகிறார். சச்சின் என்ற பெயரைக் கேட்டால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சின்னதாக ஒரு சிரிப்பு தோன்றும். அது சொல்லும் ரசிகர்கள் சச்சின் மீது கொண்டுள்ள காதலை…
இதனிடையே காதலர் தினமான இன்று சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது முதல் காதல் எனப் பதிவிட்டு கிரிக்கெட் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரண்டு பந்துகளை எதிர்கொள்ளும் சச்சின், ஃப்ரெண்ட் ஃபூட் வைத்து ட்ரைவ் ஆடும் ஷாட்களை சச்சினின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
My First Love! 😀 pic.twitter.com/KsYEYyLaxD
— Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2020