மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடல் வெளியானது முதல் இன்று வரை ஹிட் அடித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
https://www.instagram.com/reel/CMMy2-NJtqT/?utm_source=ig_embed&utm_campaign=loading