Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவின் பொருளாதாரம் சரியுமா…? சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் முன்பு கணித்ததை காட்டிலும் அதிகமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் போரானது, அதிகளவில் அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் தேவைகள் 35% வரை அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவிலான சரிவை அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது. இதற்கு குறைந்த நிகர ஏற்றுமதி, அதிகபட்ச எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவை தான் காரணம் என கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |