Categories
உலக செய்திகள்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது!”.. -மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…!!

இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என்று மத்திய நிதி மந்திரியான  நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், அமெரிக்க நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அங்கு நடந்த உலக வங்கிக்கான வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்திலும் இந்தியாவிற்கு கடந்த நிதியாண்டில் 6,15,000 கோடி நேரடியான அன்னிய முதலீடு கிடைத்திருக்கிறது.

இதனால், உலக அளவில் முதலீட்டாளர்களிடம் இந்தியா முதலீட்டிற்கு ஏற்ற நாடு என்ற பெருமையை தக்க வைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனோவிற்கான  விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என்பதற்கு இது சாட்சியாக உள்ளது. வரக்கூடிய மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூல் அதிகமாக கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |