இந்திய குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சென்ட்ரல் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 36 வயது ஆகின்றது. இவருடைய குடும்பத்தில் ஜஸ்தீப்பின் மனைவி ஜாஸ்லீன் கவூர், எட்டு மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவருடைய குடும்பத்தை நேற்று துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அந்நாட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய குடும்பத்தை கடத்தி சென்றது யார்? கடத்தல்காரர்கள் எத்தனை பேர்? எதற்காக கடத்தினார்கள்? போன்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் எங்கு உள்ளது? அவர்களை மீட்சிக்கும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.