அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார்.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தின் மெர்சிட் கவுண்டியில் இருக்கும் பழத்தோட்டம் ஒன்றில் இவர்கள் நான்கு பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தார்கள். அதன்படி நேற்று நள்ளிரவு நேரத்தில் 48 வயதுடைய ஜீசஸ் மானுவல் சல்காடோ என்ற நபர் கைதாகியுள்ளார். தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.