இந்திய உணவுப் பாதுகாப்பு , தர நிறுவனத்தில், டெக்னிக்கல் ஆபிசர் உள்ளிட்ட 13 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்
2. தொழில்நுட்ப அதிகாரிகள்
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
4. உதவியாளர்கள்
5. பர்சனல் அசிஸ்டெண்ட்
6. துணை இயக்குனர் உள்ளிட்ட 13 பணிகள் இதில் அடங்கும்.
காலிப்பணியிடங்கள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் – 05
2. தொழில்நுட்ப அதிகாரிகள் – 130
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி – 37
4. உதவியாளர்கள் – 34
5. பர்சனல் அசிஸ்டெண்ட்கள் – 25
6. துணை இயக்குனர்கள் – 06
மொத்த காலிப்பணியிடங்கள் = 275
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 25.04.2019
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 35_ ஆகவும், ஒவ்வொரு பணிகளுக்கும் வயது வரம்பில் மாற்றங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தேர்வுக்கட்டணம்:
பொதுபிரிவு / EWS / OBC – ரூ.1,000
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் / PwBD – ரூ.250
குறிப்பு:
தேர்வுக்கட்டணத்தை இணையதளத்தில் மட்டும் செலுத்த முடியும்.
செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற முடியாது.
தேர்வு முறை:
1. கணினி வழித்தேர்வு
2. எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, (B.A / B.Sc / B.E / B.Tech / Law / MBA / MCA) போன்ற ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். +2 படித்தவர்களுக்கும் சில பணிகளுண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/60149//Instruction.html- என்ற இணையதத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.மேலும் பல்வேறு தகவல்களை பெற , https://www.fssai.gov.in/home/career.html – என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.