Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கோல்கீப்பர் மரணம்…!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் பிரசண்டா டோரா (வயது 44) காலமானார். இவர் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . இந்நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் 1999 இல் சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றவர் ஆவார். மேலும் மோஹன் பஹான், ஈஸ்ட் பெங்கால், தெற்காசிய கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |