ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஹனீஃப் அத்மரை நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் வைத்து சந்தித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஹனீஃப் அத்மரை நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் வைத்து சந்தித்துள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தஜிகிஸ்தானுக்கு 2 நாட்கள் பயணம் சென்றுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தலீபான்கள் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் தலீபான் அமைப்பு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய பகுதிகள் தங்களது வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே தலீபான்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.