Categories
உலக செய்திகள்

“இந்திய சிறுமி” அமெரிக்காவில் சாதனை…. கௌரவித்த பிரபல பத்திரிக்கை…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கியதற்காக பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கீதாஞ்சலி. இவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். கீதாஞ்சலி ஆன்லைன் துன்புறுத்தல்களை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து எச்சரிக்கும் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதேபோன்று நீரின் சுத்தமான தன்மையினை அறிந்து கொள்ளும் வகையிலான ஒரு செயலியையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இந்த செயலியின் பெயர் டெத்திஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை டைம்ஸ் பத்திரிகை கௌரவித்து வருகிறது. இந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  சிறுமி கீதாஞ்சலிக்கு “kid of the year” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

Categories

Tech |