அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிய ரசீதுடன் சென்று புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள அதில் பல உணவுப் பொருட்களை 200 சதவீத விலை அதிகரித்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் ராஜேந்திர சிங் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனையும் 7 1/2 லட்சம் அபராதமும் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.