Categories
உலக செய்திகள்

“ஆஹா சூப்பர்!” இத்தனை கோடியா….? இந்திய மாணவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்….!!!

கூகுள் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவிக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது.

பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த ஐடி மாணவர்களுக்கு அதிக ஊதியத்துடன் பணி வாய்ப்பை கொடுத்து வருகிறது. அதன்படி, பீகார் மாநிலத்தில் வசிக்கும் சம்ப்ரீத்தி என்ற ஐடி மாணவிக்கு கூகுள் நிறுவனம் 1.10 கோடி சம்பளத்துடன் பணி வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

இந்த மாணவி, கடந்த 2021 ஆம் வருடம், மே மாதத்தில் டெல்லியில் உள்ள டெக்னாலஜி கல்லூரியில் பி.டெக் கணினி பொறியியல் படித்து முடித்திருக்கிறார். அதன்பின்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில், 44 லட்சம் ஊதியத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.

அதில், அவருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில், 9 சுற்றுகள் இருந்ததாகவும், அனைத்து தடைகளையும் கடந்து தற்போது இந்த இடத்திற்கு வந்து விட்டேன் என்றும் சம்பரீத்தி மகிழ்வுடன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |