ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல வருடங்களாகவே அரச படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களை புகைப்படம் எடுப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திகி என்பவர் அந்நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இச்செயலுக்காக தலிபான் தீவிரவாதிகள் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
இது குறித்து தலீபான் தீவிரவாத குழுவின் செய்திதொடர்பாளரான சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாவது, மோதல் நடந்த இடத்தில் பத்திரிகையாளர் இருந்தார் என்பது தெரியவில்லை.
இதுபோன்ற சம்பவங்களில் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு சரியாக தெரியப்படுத்தினால் தான் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.