உலகக்கோப்பையில் இந்திய கபடி அணி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை முன்னாள் கிரிக்கெட் சேவாக்கின் அசத்தல் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் 8_ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அசத்தல் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற எட்டு உலகக்கோப்பை கபடித் தொடரின் சாம்பியனும் இந்திய அணிதான். இப்போட்டியின் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் சேவாக்கின் ட்வீட்தான். 2016இல் இந்திய வீரர் சேவாக்கும் இங்கிலாந்தின் விளையாட்டுப் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கும் ட்விட்டரில் மோதில் ஏற்பட்டது.
இந்திய அணியின் விளையாட்டை மட்டம்தட்டும் வகையில் ட்வீட் செய்த பியர்ஸ் மோர்கனுக்கு சேவாக் நோஸ்-கட் தரும் வகையில் தக்க பதிலடி கொடுத்தார். இந்திய அணி உலகக்கோப்பை கபடியை வென்ற பிறகு சேவாக், ‘கபடி போட்டியைக் கண்டுபிடித்த இந்திய அணி எட்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது. மற்ற இடங்களில் கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு எழுத்துப்பிழைகளை சரிசெய்வதில் மட்டுமே சிறந்து விளங்குகிறது’ எனக் கிண்டலாகப் பதிவிட்டார்.
முன்னதாக, சேவாக்கின் ட்வீட்டிலிருந்த எழுத்துப்பிழையை பியர்ஸ் மோர்கன் சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற வகையில்தான் சேவாக்கின் ட்வீட் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்பிறகு, இங்கிலாந்து அணி நடப்பு ஆண்டில் உலகக்கோப்பையை வென்றாலும் அது ஐசிசியின் விதிமுறைப்படிதான் கிடைத்தது என்பதே நிதர்சனம். கிரிக்கெட்டில் உலகக்கோப்பை சாம்பியன் வென்ற அணிகளின் பெயர்கள் மாறினாலும், அன்றும், இன்றும் உலகக்கோப்பை கபடி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பெயர் மாறாமல்தான் இருக்கிறது.
India invented Kabaddi & r World Champs for 8th time.Elsewhere some country invented Cricket & r yet only good in correcting typos.#INDvIRN pic.twitter.com/IG9fucAMMo
— Virender Sehwag (@virendersehwag) October 22, 2016