இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் என்பவர் நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம், சந்திரன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சிப் பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே, விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இதில், நான்கு பெண்கள் உட்பட 10 நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 10 வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அனில் மேனன் என்பவரும் தேர்வாகி இருக்கிறார். இவர் அமெரிக்காவின் விமானப்படையில், லேப்டனென்ட் கர்னெலாக பணிபுரிந்து வருகிறார்.