அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இதே நிலைமை தான் அங்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று பலமாக வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.