Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நீண்ட இழுபறி… சரி வந்து கூட்டிட்டு போங்க… நாளை சீனா செல்லும் இந்திய விமானம்..!!

நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால்  வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663  பேர் பலியாகியுள்ளனர் என்றும்,  77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கின்ற வூஹான் நகருக்கு இந்தியர்கள் பலர் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் நிமித்தமாக சென்றிருந்தனர். இதையடுத்து மத்திய அரசு அவர்களை மீட்க முடிவுசெய்து ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை வூஹான்  நகருக்கு இரண்டு முறை அனுப்பி அங்கிருந்த 600-க்கும் அதிகமான இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து கொண்டு வந்தது.

பின்னர் நாடு திரும்பிய அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

Image result for Indian military flight to Wuhan, China tomorrow

இருப்பினும் வூஹான் நகரில் இன்னும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றார்கள். ஆகவே அவர்களையும் இந்தியா மீட்டு வருவதற்கு சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய இராணுவ விமானத்தை அந்நாட்டின் வூஹான் நகருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த விமானத்தில் சீனாவுக்கு நட்பு ரீதியில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் கடந்த 20-ஆம் தேதி  மத்திய அரசு முன்வந்தது.

ஆனால் ஜப்பான், உக்ரேன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த விமானங்கள் அனைத்தையும் வூஹான் நகருக்குள் நுழைய அனுமதியளித்த சீன அரசு, இந்திய விமானம் அங்கு செல்வதற்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் இந்தியா ஆத்திரமடைந்து, சீனாவுக்கு ஒரு சில மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நேற்று முன்தினம் தடைவிதித்தது.

இந்தநிலையில், வூஹான் நகரில் இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்ல நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீன அரசு முடிவை மாற்றி நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கு மருந்துபொருட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய இராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வூஹான் நகருக்கு நாளை செல்கிறது. இந்த விமானத்தில் வூஹானில் சிக்கியிருக்கும்  100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரும் 27ஆம் தேதி நாடு திரும்புவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |