இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் .
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.
1981 – பத்ம பூஷன் ,1990 – பத்ம விபூஷன்,1997 – பாரத ரத்னா,1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது,1998 – வீர் சவர்கார் விருது,2000 – ராமானுஜன் விருது,2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்,2007 – கிங் சார்லஸ்-II பட்டம்,2008 – பொறியியல் டாக்டர் பட்டம்,2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது,2009 – ஹூவர் மெடல்,2010 – பொறியியல் டாக்டர் பட்டம்,2012 – சட்டங்களின் டாக்டர்,2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது போன்ற பல விருதுகளை சூடிய நாயகன் நம் அப்துல்கலாம் அவர்கள் .
ஜூலை 27, 2015 ல் அப்துல் கலாம் அவர்கள், ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இன்னுயிர் நீத்தார் .
இத்தகைய சிறப்புக்குரிய கலாமின் நினைவு நாளை அவரது உறுதிமொழிகளோடு நினைவு கூறுவோம்.
எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்க்க் கற்றுக்கொடுப்பேன்.
மதுபானத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.அல்ல்ல்படும் எனது சகோதர்ர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.குறைந்த்து பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.
நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்உடல் ஊன முற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமித்த்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.