கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் தங்கி இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து 36 வயதுடைய ஆதித்யா சிங் எனும் நபர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் ஏஞ்சல்சிக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். வேறு ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு ஆதித்யா விமான நிலையத்திலேயே மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதன்பின் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் நான் ஒரு விமான நிலையம் பணியாளர் என்று கூறி ஏமாற்றினார். ஆனால் உண்மையை அறிந்த போலீசார் ஆதித்யாவை கைது செய்தனர்.ஆதித்யாவை கைது செய்ததை பார்த்த அவரது சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விருந்தோம்பல் துறை பணியாளராக பணியாற்றி வந்த ஆதித்யா எந்த அறைக்கு சென்றாலும் அந்த அறையே பிரகாசம் ஆகிவிடும் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.