Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை உஷார்நிலை … பாகிஸ்தான் ஊடுருவ முடியாது ..!!

இந்தியா மீது மீது பாகிஸ்தான்  தாக்குதல் நடத்தும்  என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . 

அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் , 

 

கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த உள்ளதாகவும்  இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.  இந்நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் விதமாக இந்திய கடற்படை உஷார் நிலையில் இருப்பதாகவும்,  கடற்பகுதியில் போர் கப்பல்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

Categories

Tech |