நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நட்பை விரும்பும் நாடு இந்தியா. இந்தியாவின் தலைப் பகுதியில் பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக நேபாளமும் எல்லைப் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்தியா சார்பில் காணொளி காட்சியின் மூலம் நடத்தப்பட்ட சாலை இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சுறுசுறுப்பான நேபாளம் உத்தரகாண்ட் மாநிலத்தின் கலப்பானி, லிபுலேக், லிம்பியாத்துரா ஆகிய பகுதிகளை தனது நாட்டின் வரைபடத்துடன் இணைக்க திட்டமிட்டது.
இந்தியாவுடன் உள்ள மூன்று பகுதிகளும் பூர்விகம் ஆகவே நமது நாடு என்பதற்கான தகவல்களை திரட்ட அதிகள் குழுவை நியமித்த நேபாள அரசு உடனடியாக தமது நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை உருவாக்கியது. நாடாளுமன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி கொண்டுவரப்பட்ட புதிய வரைபட மசோதாவுக்கு 258 பிரதிநிதிகள் வாக்களித்தனர். எல்லை இணைப்பு மசோதா, அதிக பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியா தமது அதிருப்தியை காட்டமாக பதிவு செய்தது.. இதற்கிடையே கொரோனா வைரஸை விட இந்திய வைரஸ் மோசமானது என்று நேபாள பிரதமர் ஒலி விமர்சித்தார்..
வலிமை மிகுந்த நாடுகளுள் ஒன்றும், வல்லரசு நாடுகள் விரும்பும் மிகப்பெரிய நட்பு நாடான இந்தியாவுக்கு 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான நேபாளம் வேடிக்கை காட்டியுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எதிர்பார்க்காத வகையில் நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையிலிருந்து தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களும் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை இதற்கு பின்னால் சீனா இருக்குமோ என்று சொல்லப்படுகிறது.
ஆம், முன்னதாக இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.. சீன தரப்பிலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இதனை சீனா சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சீனாவுடன் நட்பாக பழகி வருவதால் இந்தியாவை நேபாளம் தொடர்ந்து சீண்டி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதனால் சீனா சொல்லியே நேபாளம் இப்படி செய்ததா என அனைவரது மனதிலும் கேள்வியை எழுப்புகிறது.