Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் -அமித் ஷா……

நாட்டிற்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என காவல்துறை டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் கந்துகொண்ட  மூன்று  நாள் கொண்ட மாநாடு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உள்ளிட்டோர் தனி தனியாக கலந்து கொண்டனர்.

அம்மாநாட்டில், நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்,
நாட்டின் உயர் காவல் அதிகாரிகள் எல்லாரும் ஒரே இடத்தில்ஒன்று கூடி, நாட்டின் பாதுகாப்பு பற்றிய கொள்கைகளை வகுப்பது மகிழ்ச்சி தருகின்றது. காவல் துறை சிறந்த பணிகளை செய்து வருகின்றது.

இப்பொழுது இருக்கும்  ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது.மேலும், அகில இந்திய போலீஸ் பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தடய அறிவியல் பல்கலைக்கழகமும் நிறுவ மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றிற்கு மாநிலங்களின் உள்ளே உறுப்பு கல்லூரிகளும் ஆரம்பிக்கப்படும், என்று பேசினார்.

Categories

Tech |