Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மக்களுக்கு அந்நாட்டு அரசு புதிதாக பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.

உக்ரைன் அரசு, இந்திய மக்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் அரசு, பக்கத்து நாடுகளுடன் கலந்துரையாடி தங்கள்  மக்களுக்காக எல்லைப் பகுதிகளை திறந்து வைக்க அனுமதி கோரியுள்ளது. இந்தியர்கள் ஹங்கேரி மற்றும் ரோமனிய நாடுகளில் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய மக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் அருகே இருக்கும் ரயில் நிலையங்கள் மூலமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். வழக்கமாக செல்லக்கூடிய ரயில்களில் உடனடியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்காக தற்போது இயக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த ரயில்களில் டிக்கெட்டுகள் வாங்க தேவையில்லை. இந்த ரயில் போக்குவரத்து தொடர்பில் அறிய https://www.uz.gov.ua/ என்ற இணையதளத்தை அணுகுங்கள். இந்திய மக்கள் கூட்டத்துடன் பயணிக்க வேண்டும்.

யாரும் தனியாக செல்ல வேண்டாம். ரயில் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிய இந்திய தூதரக அதிகாரிகளை அணுகுங்கள். அனைத்து மக்களும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் இருங்கள் என்று கீவ் நகரில் இருக்கும் இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |