கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்திய மக்களின் எண்ணிக்கை இந்த வருடம் தற்போது வரை இல்லாத அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019 ஆம் வருடத்தில் கனடா நாட்டிற்கு சுமார் 84,114 இந்திய மக்கள் குடிபெயர்ந்தார்கள். இந்நிலையில் இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாத கடைசியில் கனடா நாட்டில் சுமார் 69,014 இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெறவிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வருட கடைசிக்குள் 2019 ஆம் வருடத்தை விட அதிக எண்ணிக்கையில் இந்திய மக்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து கனடாவில் உள்ளவர்களுக்கு நிரந்தர வாழிடத்திற்கான பாதையை திறப்பதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2021-ம் வருடத்தில் கனடாவில் வாழும் இந்தியர்கள் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களை விட அதிகரித்திருக்கிறது.