Categories
தேசிய செய்திகள்

அரசுமுறை பயணம் நிறைவு…. தாயகம் திரும்பினார் குடியரசு தலைவர்..!!

அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார்.

Image

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த உடன்படிக்கை கையெழுத்தானது. குறிப்பாக ராணுவம், கடல் பாதுகாப்பில் இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதுதான் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த பயணமானது இந்தியா-பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையேயான 70 ஆண்டின் உறைவை பறைசாற்றும்விதமாக அமைந்தது.

Image

இதையடுத்து அங்கிருந்து ஜப்பான் சென்ற குடியரசு தலைவர் அந்நாட்டின் புதிய பேரரசராக நருஹிட்டோ முடிசூட்டிக் கொண்ட விழாவில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து வணிகம், கலாச்சாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 19 ஆண்டுகளில் இந்திய குடியரசு தலைவர் ஜப்பான் சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |