Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் வழங்க முன்வந்துள்ளது இந்திய ரயில்வே!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைத்து பயணிகள் ரயிலையும் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்கள் அல்லது மிகவும் பிந்தங்கிய சூழலில் உள்ள கிராமங்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை தீவிர சிகிச்சை பிரிவாக`ஐசோலேஷன்’ வார்டாக மாற்றும் யோசனையையும் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டம் முதன் முதலாக பஞ்சாப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ரயில்வே தொழிற்சாலை ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த உள்ளது.

Categories

Tech |