கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பெய்து வரும் தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை கர்நாடகாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மகாராஷ்டிரா, மும்பை ,புனே உள்ளிட்ட சில வட மாநில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.