Categories
தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல்… இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்..!!

ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி  சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.  

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எல்லையில்  போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷரா செக்டாரில் இன்று காலை 6: 30 மணியளவில்   பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

Image result for Rajouri indian army

ஆனால் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச்  சேர்ந்த 35 வயதான லன்ஸ் நாயக் சந்தீப் என தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்திற்காக அவர் 15 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் உஷார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றது.

Categories

Tech |