ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாகவே அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. ஆனால் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் சில வீரர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.