நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குசந்தை தற்போது உயர்ந்தே முடிந்துள்ளது. அதில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து 39,872 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 11,707 புள்ளிகளில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்த்தது. பங்குகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.